Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 28:7 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 28 1 Chronicles 28:7

1 நாளாகமம் 28:7
இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.

Tamil Indian Revised Version
இந்தநாளில் நடக்கிறபடியே அவன் என்னுடைய கற்பனைகளின்படியும் என்னுடைய நியாயங்களின்படியும் செய்ய உறுதியாக இருப்பானானால், அவனுடைய ராஜ்ஜியபாரத்தை என்றென்றைக்கும் உறுதிப்படுத்துவேன் என்றார்.

Tamil Easy Reading Version
சாலொமோன் என் சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிறான். அவன் தொடர்ந்து இவ்வாறு எனது சட்டங்களுக்கு அடி பணிந்து வந்தால், அவனது அரசை என்றென்றைக்கும் பலமுள்ளதாக ஆக்குவேன்!’ என்றார்.”

Thiru Viviliam
அவன் என் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் இன்றுபோல் உறுதியுடன் கடைப்பிடித்து வந்தால் நான் அவன் அரசை என்றென்றும் நிலைநாட்டுவேன்’ என்றார்.⒫

1 Chronicles 28:61 Chronicles 281 Chronicles 28:8

King James Version (KJV)
Moreover I will establish his kingdom for ever, if he be constant to do my commandments and my judgments, as at this day.

American Standard Version (ASV)
And I will establish his kingdom for ever, if he be constant to do my commandments and mine ordinances, as at this day.

Bible in Basic English (BBE)
I will keep his kingdom in its place for ever, if he is strong at all times to do my orders and keep my rules, as at this day.

Darby English Bible (DBY)
And I will establish his kingdom for ever, if he be firm to do my commandments and mine ordinances, as at this day.

Webster’s Bible (WBT)
Moreover I will establish his kingdom for ever, if he shall be constant to do my commandments and my judgments, as at this day.

World English Bible (WEB)
I will establish his kingdom forever, if he be constant to do my commandments and my ordinances, as at this day.

Young’s Literal Translation (YLT)
and I have established his kingdom to the age, if he is strong to do My commands, and My judgments, as at this day.

1 நாளாகமம் 1 Chronicles 28:7
இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.
Moreover I will establish his kingdom for ever, if he be constant to do my commandments and my judgments, as at this day.

וַהֲכִֽינוֹתִ֥יwahăkînôtîva-huh-hee-noh-TEE
אֶתʾetet
מַלְכוּת֖וֹmalkûtômahl-hoo-TOH
עַדʿadad
לְעוֹלָ֑םlĕʿôlāmleh-oh-LAHM
אִםʾimeem
יֶֽחֱזַ֗קyeḥĕzaqyeh-hay-ZAHK
לַֽעֲשׂ֛וֹתlaʿăśôtla-uh-SOTE
מִצְוֹתַ֥יmiṣwōtaymee-ts-oh-TAI
וּמִשְׁפָּטַ֖יûmišpāṭayoo-meesh-pa-TAI
כַּיּ֥וֹםkayyômKA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

Cross Reference

1 நாளாகமம் 22:13
கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

தானியேல் 2:44
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.

சங்கீதம் 132:12
உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.

சங்கீதம் 89:28
என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை, அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.

1 நாளாகமம் 28:10
இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.

1 இராஜாக்கள் 11:9
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நியதேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,

1 இராஜாக்கள் 11:4
சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.

1 இராஜாக்கள் 9:4
நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்,

1 இராஜாக்கள் 8:61
ஆதலால் இந்நாளில் இருக்கிறது போல, நீங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்றான்.

1 இராஜாக்கள் 6:12
நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக் குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,

1 இராஜாக்கள் 2:2
நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன் கொண்டு புருஷனாயிரு.

யோசுவா 1:6
பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.


Tags இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால் அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்
1 Chronicles 28:7 in Tamil Concordance 1 Chronicles 28:7 in Tamil Interlinear 1 Chronicles 28:7 in Tamil Image